carol.cactrust.org

CALVARY ASSEMBLY CHURCH, CHRISTMAS CAROLS 2025

Song 1

எங்களுக்காய் பிறந்தவரே

எங்களுக்காய் பிறந்தவரே!
எங்கள் மத்தியிலே வாழ்ந்தவரே!
அற்புதங்கள் நிகழ்த்தி இரட்சிப்பினை உணர்த்த
மண்ணில் வந்து பிறந்த குழந்தை இயேசுவே!

இயேசு நமக்கு மட்டுமில்லை பூமிக்கே சொந்தம்
பூமியும் வானமும் அவருக்கே சொந்தம் (2)

அன்று பிறந்த குழந்தை இயேசு தேவனின் பிள்ளை
பூமியில் பிறந்த நாம் இயேசுவின் பிள்ளை (2)

- எங்களுக்காய் பிறந்தவரே

1. ஆல்ஃபாவும் ஒமேகாவும் நீர்தானே
சாரோனின் ரோஜாவும் நீர்தானே
பள்ளத்தாக்கின் லீலி மலர் நீர்தானே
எங்கள் வாழ்வும் வழியும் நீர்தானே

சாத்தானை எதிர்த்து யுத்தம் செய்தீரே
எங்கள் பாவத்திற்காக இரத்தம் தந்தீரே

இயேசு நமக்கு மட்டுமில்லை பூமிக்கே சொந்தம்
பூமியும் வானமும் அவருக்கே சொந்தம் (2)

2. விண்ணில் தெரித்து முளைத்த
விடி வெள்ளி குழந்தை இயேசு
நாம் பிறக்கும் முன்பதாக நம்மை தெரிந்து கொண்ட இயேசு

பார்வை இல்லாமல் பரிதவித்தவருக்கு பார்வை தந்த இயேசு
அவர் ஆடை தொட்டவுடன் அற்புதம் செய்த சர்வ வல்ல இயேசு

இயேசு நமக்கு மட்டுமில்லை பூமிக்கே சொந்தம்
பூமியும் வானமும் அவருக்கே சொந்தம் (2)

அன்று பிறந்த குழந்தை இயேசு தேவனின் பிள்ளை
பூமியில் பிறந்த நாம் இயேசுவின் பிள்ளை (2)

எங்களுக்காய் பிறந்தவரே!
எங்கள் மத்தியிலே வாழ்ந்தவரே!
அற்புதங்கள் நிகழ்த்தி இரட்சிப்பினை உணர்த்த
மண்ணில் வந்து பிறந்த குழந்தை இயேசுவே!

Song 2

இதயம் என்னும் குடில்தேடி

இதயம் என்னும் குடில்தேடி - நம் இயேசு பிறந்தாரே
இன்பம் பொங்கச் சொல்லியழைக்க இயேசு பிறந்தாரே (2)

எங்கும் கேட்கிறதம்மா ஒரு சந்தோசப்பாட்டு
மேய்ப்பர் இங்கே பிறந்தார் என்னும் சேதியைத் தான் கேட்டு (2)

Merry Merry Christmas (2) என்றே பாடுவோம்
மாபரன் இயேசு பிறந்தார் என்றே போற்றிப் பாடுவோம் (2)

1. தெய்வம் ஒன்று தேவை அறிந்து குழந்தையின் கோலத்திலே
தேவகுமாரன் நாமத்தைச் சூடி வந்தது பூமியிலே

திசைகள் யாவும் விடுதலை முழக்கம் கேட்டது காதினிலே
வாடிய நெஞ்சங்கள் வாழ்வைக் கண்டது பாலகன் பிறப்பினிலே

விந்தை நிறைந்த இரவில் இங்கே வந்தார் மேசியா
ராகம் பாடி வாழ்த்திடவே நம் நேசர் பிறந்தாரே

Merry Merry Christmas (2) என்றே பாடுவோம்
மாபரன் இயேசு பிறந்தார் என்றே போற்றிப் பாடுவோம் (2)

2. ஏழ்மைக் குடியில் எளிமை வாழ்வை ஏற்றிடவே பிறந்தார்
ஏழை வாழ்வை நேசித்திடவே மீட்பரும் நமை அழைத்தார்

அன்பே நம்மில் உறவுப் பாலம் சொல்லிடவே பிறந்தார்
அன்பை பிறரில் விதைக்கச் சொல்லி அழைத்தார் இயேசு பிரான்

தாழ்மைக் கொண்ட நெஞ்சம் இங்கே உயர்வைக் காணுமென்றார்
நேர்மைக் கொண்ட நெஞ்சில் வந்து குடிகொள் வேன் என்றார்

Merry Merry Christmas (2) என்றே பாடுவோம்
மாபரன் இயேசு பிறந்தார் என்றே போற்றிப் பாடுவோம் (4)

Song 3

விண்ணுலக தேவன் மண்ணில் வந்தாரே

விண்ணுலக தேவன் மண்ணில் வந்தாரே
அன்பின் அடையாளமாய் அவதரித்தார் (2)

மனுஷரின் பாவம் போக்க
இம்மானுவேலனாய் மேசியா மண்ணில் உதித்தார் (2)

அல்லேலூயா (2) இயேசு பிறந்திட்டார்
அல்லேலூயா (2) கிறிஸ்து உதித்திட்டார்

1. எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கும் அவருக்கு முன் (2)

வானாதி வானங்களில் உயர்ந்தவர் இயேசு
இரட்சகர் கிறிஸ்து அவரே (2)

அல்லேலூயா (2) இயேசு பிறந்திட்டார்
அல்லேலூயா (2) கிறிஸ்து உதித்திட்டார்

2. உன்னையும் என்னையும் மீட்கும் பொருளாய்
உனக்காக எனக்காக பிறந்திட்டாரே (2)

சர்வ வல்ல தேவன் சகலத்தையும் விட்டு
மானிடராய் அவதரித்தார் (2)

அல்லேலூயா (2) இயேசு பிறந்திட்டார்
அல்லேலூயா (2) கிறிஸ்து உதித்திட்டார்

Song 4

பிறந்தார் பிறந்தார் - இயேசு

பிறந்தார் பிறந்தார் - இயேசு
தேவன் மானிடராய் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் - இயேசு
மனிதர் வாழ்வடைய பிறந்தார் (2)

1. வான சேனைகள் தூதர் கூட்டங்கள்
ஒன்றாய் கூடினர் - ஏன் பாடினர்? (2)

உன்னத தேவனுக்கு மகிமையாக -
பூமியில் மனிதருக்கு பிரியமாக - பிறந்தார்

2. மேய்ப்பர் நடுவினில் நள் இரவினில்
தூதர் தோன்றியே என்ன அறிவித்தார்? (2)

எல்லா ஜனத்துக்கும் நிறைவானதோர்
சந்தோஷமாய் நற்செய்தியாய் - பிறந்தார்

3. உலகமே அவரால் உண்டானாலும் -
ஒரு சத்திரத்தில் இடம் இல்லையோ? (2)

சின்ன பெத்தலயில் ஒரு முன்னணையில்
நம்மை மீட்கவே தாழ்மையாகவே - பிறந்தார்

தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
லூக்கா 2:10, 11
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றாள்.
மத்தேயு 1:21
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு எனப்படும்.
ஏசாயா 9:6
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:16
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
ஏசாயா 58:11
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது.
1 தீமோத்தேயு 1:15
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 8:28
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
யோவான் 1:12
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
பிலிப்பியர் 4:19
இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தர் உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.
ஏசாயா 60:19
அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.
ஏசாயா 58:8
இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது.
மத்தேயு 4:16
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.
மீகா 5:2
உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
யோவான் 1:9
இதோ, நாட்கள் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழுப்புவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியில் நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
எரேமியா 23:5
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
யோபு 5:9

© Copyrights Calvary Assembly Church