எங்களுக்காய் பிறந்தவரே!
எங்கள் மத்தியிலே வாழ்ந்தவரே!
அற்புதங்கள் நிகழ்த்தி இரட்சிப்பினை உணர்த்த
மண்ணில் வந்து பிறந்த குழந்தை இயேசுவே!
இயேசு நமக்கு மட்டுமில்லை பூமிக்கே சொந்தம்
பூமியும் வானமும் அவருக்கே சொந்தம் (2)
அன்று பிறந்த குழந்தை இயேசு தேவனின் பிள்ளை
பூமியில் பிறந்த நாம் இயேசுவின் பிள்ளை (2)
- எங்களுக்காய் பிறந்தவரே
1. ஆல்ஃபாவும் ஒமேகாவும் நீர்தானே
சாரோனின் ரோஜாவும் நீர்தானே
பள்ளத்தாக்கின் லீலி மலர் நீர்தானே
எங்கள் வாழ்வும் வழியும் நீர்தானே
சாத்தானை எதிர்த்து யுத்தம் செய்தீரே
எங்கள் பாவத்திற்காக இரத்தம் தந்தீரே
இயேசு நமக்கு மட்டுமில்லை பூமிக்கே சொந்தம்
பூமியும் வானமும் அவருக்கே சொந்தம் (2)
Happy Happy Christmas, Merry Merry Christmas (2)
2. விண்ணில் தெரித்து முளைத்த
விடி வெள்ளி குழந்தை இயேசு
நாம் பிறக்கும் முன்பதாக நம்மை தெரிந்து கொண்ட இயேசு
பார்வை இல்லாமல் பரிதவித்தவருக்கு பார்வை தந்த இயேசு
அவர் ஆடை தொட்டவுடன் அற்புதம் செய்த சர்வ வல்ல இயேசு
இயேசு நமக்கு மட்டுமில்லை பூமிக்கே சொந்தம்
பூமியும் வானமும் அவருக்கே சொந்தம் (2)
அன்று பிறந்த குழந்தை இயேசு தேவனின் பிள்ளை
பூமியில் பிறந்த நாம் இயேசுவின் பிள்ளை (2)
எங்களுக்காய் பிறந்தவரே!
எங்கள் மத்தியிலே வாழ்ந்தவரே!
அற்புதங்கள் நிகழ்த்தி இரட்சிப்பினை உணர்த்த
மண்ணில் வந்து பிறந்த குழந்தை இயேசுவே!
Happy Happy Christmas, Merry Merry Christmas (4)
இதயம் என்னும் குடில்தேடி - நம் இயேசு பிறந்தாரே
இன்பம் பொங்கச் சொல்லியழைக்க இயேசு பிறந்தாரே (2)
எங்கும் கேட்கிறதம்மா ஒரு சந்தோசப்பாட்டு
மேய்ப்பர் இங்கே பிறந்தார் என்னும் சேதியைத் தான் கேட்டு (2)
Merry Merry Christmas (2) என்றே பாடுவோம்
மாபரன் இயேசு பிறந்தார் என்றே போற்றிப் பாடுவோம் (2)
1. தெய்வம் ஒன்று தேவை அறிந்து குழந்தையின் கோலத்திலே
தேவகுமாரன் நாமத்தைச் சூடி வந்தது பூமியிலே
திசைகள் யாவும் விடுதலை முழக்கம் கேட்டது காதினிலே
வாடிய நெஞ்சங்கள் வாழ்வைக் கண்டது பாலகன் பிறப்பினிலே
விந்தை நிறைந்த இரவில் இங்கே வந்தார் மேசியா
ராகம் பாடி வாழ்த்திடவே நம் நேசர் பிறந்தாரே
Merry Merry Christmas (2) என்றே பாடுவோம்
மாபரன் இயேசு பிறந்தார் என்றே போற்றிப் பாடுவோம் (2)
2. ஏழ்மைக் குடியில் எளிமை வாழ்வை ஏற்றிடவே பிறந்தார்
ஏழை வாழ்வை நேசித்திடவே மீட்பரும் நமை அழைத்தார்
அன்பே நம்மில் உறவுப் பாலம் சொல்லிடவே பிறந்தார்
அன்பை பிறரில் விதைக்கச் சொல்லி அழைத்தார் இயேசு பிரான்
தாழ்மைக் கொண்ட நெஞ்சம் இங்கே உயர்வைக் காணுமென்றார்
நேர்மைக் கொண்ட நெஞ்சில் வந்து குடிகொள் வேன் என்றார்
Merry Merry Christmas (2) என்றே பாடுவோம்
மாபரன் இயேசு பிறந்தார் என்றே போற்றிப் பாடுவோம் (4)
விண்ணுலக தேவன் மண்ணில் வந்தாரே
அன்பின் அடையாளமாய் அவதரித்தார் (2)
மனுஷரின் பாவம் போக்க
இம்மானுவேலனாய் மேசியா மண்ணில் உதித்தார் (2)
அல்லேலூயா (2) இயேசு பிறந்திட்டார்
அல்லேலூயா (2) கிறிஸ்து உதித்திட்டார்
1. எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கும் அவருக்கு முன் (2)
வானாதி வானங்களில் உயர்ந்தவர் இயேசு
இரட்சகர் கிறிஸ்து அவரே (2)
அல்லேலூயா (2) இயேசு பிறந்திட்டார்
அல்லேலூயா (2) கிறிஸ்து உதித்திட்டார்
2. உன்னையும் என்னையும் மீட்கும் பொருளாய்
உனக்காக எனக்காக பிறந்திட்டாரே (2)
சர்வ வல்ல தேவன் சகலத்தையும் விட்டு
மானிடராய் அவதரித்தார் (2)
அல்லேலூயா (2) இயேசு பிறந்திட்டார்
அல்லேலூயா (2) கிறிஸ்து உதித்திட்டார்
பிறந்தார் பிறந்தார் - இயேசு
தேவன் மானிடராய் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் - இயேசு
மனிதர் வாழ்வடைய பிறந்தார் (2)
1. வான சேனைகள் தூதர் கூட்டங்கள்
ஒன்றாய் கூடினர் - ஏன் பாடினர்? (2)
உன்னத தேவனுக்கு மகிமையாக -
பூமியில் மனிதருக்கு பிரியமாக - பிறந்தார்
2. மேய்ப்பர் நடுவினில் நள் இரவினில்
தூதர் தோன்றியே என்ன அறிவித்தார்? (2)
எல்லா ஜனத்துக்கும் நிறைவானதோர்
சந்தோஷமாய் நற்செய்தியாய் - பிறந்தார்
3. உலகமே அவரால் உண்டானாலும் -
ஒரு சத்திரத்தில் இடம் இல்லையோ? (2)
சின்ன பெத்தலயில் ஒரு முன்னணையில்
நம்மை மீட்கவே தாழ்மையாகவே - பிறந்தார்
© Copyrights Calvary Assembly Church